நன்றிபலிபீடம் கட்டுவோம்
நல்லதெய்வம் நன்மை செய்தார்
செய்த நன்மைகள் ஆயிரங்கள்
சொல்லி சொல்லி பாடுவேன்
நன்றி தகப்பனே நன்மை செய்தீரே
ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்
பாவம் நீங்கிட கழுவி விட்டீர்
உமக்கென்று வாழ பிரித்தெடுத்து
உமது ஊழியம் செய்ய வைத்தீர்
பார்க்கும் கண்களை தந்தீரய்யா
பாடும் உதடுகள் தந்தீரய்யா
உழைக்கும் கரங்களை தந்தீரய்யா
ஓடும் கால்களைத் தந்தீரய்யா
புதிய உடன்பாட்டின் அடையாளமாய்
புனித இரத்தம் ஊற்றினீரே
சத்திய ஜீவ வார்த்தையாலே
மரித்த வாழ்வையே மாற்றினீரே
இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்
இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர்
உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு
உரிமை சொத்தாக வைத்துக் கொண்டீர்
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல் அவர்
இனியும் நடத்திடுவார்
அவர் கிருபை என்றென்றுமுள்ளது - 2
தாழ்வில் நினைத்தவரே
என்னை தயவாய் தூக்கினீரே
சத்துருவின் கையினின்று விடுதலை தந்தவரை
என்றென்றும் ஸ்தோத்திரிப்பேன்
உம் வார்த்தையால் தேற்றினீரே
ஆத்துமாவில் பெலன் தந்தீரே
கூப்பிடும் போது பதில் தரும் தேவனே
உம்மையே ஆராதிப்பேன்
உம் நீதியின் வலக்கரத்தால்
என்னை தாங்கி இரட்சிப்பவரே
எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
என்றென்றும் நம்பிடுவேன்
அநாதி சிநேகத்தால் என்னை
நேசித்தீரையா காருண்யத்தினால்
என்னை இழுத்துக் கொண்டீரே
உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது
உங்க தயவு பெரியது
அனாதையாய் அலைந்த
என்னை தேடி வந்தீரே
அன்பு காட்டி அரவணைத்து
காத்துக் கொண்டீரே – அன்பு
நிலையில்லாத உலகத்தில்
அலைந்தேனய்யா
நிகரில்லாத இயேசுவே
அணைத்துக் கொண்டீரே
தாயின் கருவில் தோன்றுமுன்னே
தெரிந்து கொண்டீரே
தயைப் போல ஆற்றி தேற்றி
நடத்தி வந்தீரே
நடத்தி வந்த பாதைகளை
நினைக்கும் போதெல்லாம்
கண்ணீரோடு நன்றி சொல்லி
துதிக்கின்றேனய்யா
கர்த்தர் செய்ய நினைத்தது
தடைபட வில்லை
சகலத்தையும் நன்மையாக
செய்து முடித்தீரே
1. இந்த மட்டும் காத்த எபெனேசரே
இனிமேலும் காக்கும் யெகோவாயீரே
எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே
இந்த வருடத்தின் நாட்களிலே புது (2)
ஸ்தோத்தரிப்போம் நாமே
துதிகளுடனே ஆர்ப்பரிப்போம்
அன்பர் இயேசுவை – அல்லேலூயா!
2. யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்
எழும்பி வந்த போதிலும் காத்தவர்
சாபப் பிசாசின் சோதனை போதிலும்
இயேசு நாமத்தில் அகற்றியவர் – (2)
3. சேயைக் காக்கும் ஒரு தாயைப் போலவே
இந்த மாயலோகில் என்னைக்
காக்கும் தேவனே – மகத்தான கிருபை
என்மேலே மகிபா நீர் ஊற்றிடுமே – (2)
4. பழமையெல்லாம் ஒழிந்து போனதே
எல்லாம் புதிதாக தேவனே ஆனதே
உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே
நாங்கள் மறுரூபம் அடைந்திடவே – (2)
இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்
எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே
வாக்குகள் பல தந்து அழைத்துவந்தீர்
ஒரு தந்தை போல எம்மை தூக்கி சுமந்தீர்
இனி நீர் மாத்ரமே எங்கள் சொந்தமானீர்
உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம்
1. எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம்
காலத்தைப் படைத்தவர் தேடிவந்தீர்
சிறையிருப்பை மாற்றி தந்தீர்
சிறுமையின் ஜனம் எம்மை உயர்த்திவைத்தீர் – இனி நீர் மாத்ரமே
2. செங்கடலைக் கண்டு சோர்ந்துபோனோம்
யோர்தானின் நிலை கண்டு அஞ்சி நின்றோம்
பயப்படாதே முன் செல்லுகிறேன்
என்றுரைத்து எம்மை நடத்திவந்தீர் – இனி நீர் மாத்ரமே
3. எதிரியின் படை எம்மை சூழும்போது
ஓங்கிய புயங் கொண்டு யுத்தம் செய்தீர்
பாடச் செய்தீர் துதிக்கச் செய்தீர்
எரிகோவின் மதில்களை இடிக்கச் செய்தீர் – இனி நீர் மாத்ரமே
உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது
உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2
உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம்
என்னை உருவாக்கின கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2
சோர்ந்துபோன நேரத்திலெல்லாம்
என்னை சூழ்ந்துகொண்ட கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2
ஒன்றுமில்லா நேரத்திலெல்லாம்
எனக்கு உதவி செய்த கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2
ஊழியத்தின் பாதையிலெல்லாம்
என்னை உயர்த்திவைத்த கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே – 2
உன்னதரே உயர்ந்தவரே
அழைத்தவரே என்னை நடத்துவாரே
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை ஆராதனை
திசை தெரியாமல் நான் அலைந்த வேளை
வழி இதுவே என்று நடத்தினீரே
ஒன்றுக்கும் உதவாத என்னையுமே
உடைத்து உருவாக்கி உயர்த்தினீரே
ஊழிய பாதையில் சோர்வுகள் வந்தாலும்
சோராமல் தொடர கிருபை செய்யும்
உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே
முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்
1. யாரும் அறியாத என்னை
நன்றாய் அறிந்து
தேடி வந்த நல்ல நேசரே
2. தூக்கி எறிப்பட்ட என்னை
வேண்டுமென்று சொல்லி
சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே
3. ஒன்றுமில்லாத என்னை
உம் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்த நல்ல நேசரே
ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்
ஆட்டுக்குட்டியானவரே என் பாவங்கள் சுமந்தீர்
உமக்கே எங்கள் ஆராதனை
பரிசுத்தம் உள்ளவர் நீர் பாவமாய் மாற்றப்பட்டீர்
நீதிமானாக என்னை மாற்றினீர்
கிருபையால் இலவசமாய் நீதிமான் ஆனேனே
சிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கியதே
கிறிஸ்து எனக்காய் சாபமாய் மாறினீர்
ஆசீர்வாதமாக என்னை மாற்றினீர்
ஆசீர்வாதமானேனே(நீர்)
எனக்காய் சாபமானதனால்
சிலுவை மரணத்தில் என் சாபங்கள் நீங்கியதே
ஐஸ்வர்யம் உள்ளவர் நீர் எல்லாமே இழந்தீரே
எல்லாவற்றாலும் என்னை நிரப்பிடவே
செல்வந்தனாய் ஆனேனே
நீர் ஏழ்மையானதனால்
சிலுவை மரணத்தில் என் தரித்திரம் நீங்கியதே
என் பாவம் யாவையும் உடலிலே சுமந்தீரே
உம் சுகத்தை என் உடலில் தந்தீரே
பாவத்தில் விளைவுகளை உம்
மரணத்தால் வென்றீரே
காயங்களால் நான் சுகமானேனே – உம்
வல்லமையும் பெலனும் ஞானமும் ஐஸ்வர்யமும்
மகிமையும் ஸ்தோத்திரமும் உமக்கே உரியதே
இயேசுவே இயேசுவே ஆட்டுக்குட்டியானவரே – எங்கள்
எங்கள் இயேசுவே எல்லா மகிமைக்கும் பாத்திரரே
உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே
புது எண்ணெய்யால் புது பெலத்தால்
புதிய கிருபை புது கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
நூதன சாலேமில் சேர்த்திடுவீர் — உம்பாதம்
நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் — உம்பாதம்
என் முன் செல்லும் உம் சமூகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதே — உம்பாதம்
கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கினை நறுக்கிக் கிளை பிடுங்கி
கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் — உம்பாதம்
என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்று கண்டிடுவேன் — உம்பாதம்
சீருடனே பேருடனே
சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் — உம்பாதம்
பரிசுத்தமே பரவசமே
பரனேசருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் — உம்பாதம்
உம்மை ஆராதிக்கின்றோம்
ஏசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை போல் வேரு தெய்வம் இல்லை
ஹாலேலூயா ஹாலேலூயா -2
என்னை அழைத்தவரே
நீர் உண்மை உள்ளவரே
உந்தன் பரிசுத்த ஆவியால்
என்னையும் நிறைத்தீரே
என்னை மறுரூபமாக்கிடும்
உந்தன் மகிமையில் சேர்த்திடும்
பாவியான என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றீனீர்
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்-2
என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன் -2
1. தாயின் கருவில் உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தவர் நீரே
தாயினும் மேலாக அன்பு வைத்து
நீர் எனக்காக ஜீவன் தந்தீரே -2
2. எத்தனை முறை இடறினாலும்
அத்தனையும் மன்னித்தீரே
நன்மையும் கிருபையும் தொடரச்செய்து
என்னை மீண்டும் நடக்க வைத்தீர் -2
3. பாவி என்றே என்னை தள்ளிடாமல்
அன்போடு அணைத்து கொண்டீரே
என்னையும் உம்முடன் சேர்த்துகொள்ள
நீர் எனக்காக மீண்டும் வருவீர் -2
பகல் நேரப் பாடல் நீரே
இரவெல்லாம் கனவு நீரே
மேலான சந்தோஷம் நீரே
நாளெல்லாம் உமைப் பாடுவேன் என்
1. எருசலேமே உனை மறந்தால்
வலக்கரம் செயல் இழக்கும்
மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்
நாவு ஒட்டிக் கொள்ளும் என்
மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா
என் மணவாளரே உமை மறவேன்
2. கவலைகள் பெருகி கலங்கும்போது
மகிழ்வித்தீர் உம் அன்பினால்
கால்கள் சறுக்கி தடுமாறும் போது
தாங்கினீர் கிருபையினால் என் – மகிழ்ச்சியின்
3. தாய்மடி தவழும் குழந்தைபோல
மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்
இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்
உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி – மகிழ்ச்சியின்
4. பார்வையில் செருக்கு எனக்கில்லை
இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை
பயனற்ற உலகத்தின் செயல்களிலே
பங்கு பெறுவதில்லை – மகிழ்ச்சியின்
எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் -தேவா
என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே
வானாதி வானங்கள் யாவும்
அதின் கீழுள்ள ஆகாயமும்
பூமியில் காண்கின்ற யாவும்
கர்த்தா உம்மைப் போற்றுமே
காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனி தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
நாதா உம்மை போற்றுமே
நீரினில் வாழ்கின்ற யாவும் -இந்
நிலத்தின் ஜீவ ராசியும்
பாரினில் பறக்கின்ற யாவும்
பரனே உம்மைப் போற்றுமே
வால வயதுள்ளானோரும் – மிகும்
வயதால் முதிர்ந்தோர்களும்
பாலகர் தம் வாயினாலும்
பாடி உம்மைப் போற்றுவாரே
அன்பின் தெய்வமே என்னை
நடத்தும் தெய்வமே – நன்றியோடு
உம்மைப் பாடுவேன் -நான்
பிறந்த நாள்முதல் இந்தநாள் வரை
எத்தனையோ நன்மை செய்தீரே
ஐயா எத்தனையோ நன்மை செய்தீரே
சிறுமையானவனைத் தூக்கி எடுத்தீரே
அளவில்லாமல் ஆசீர்வதித்தீரே
இது அதிசயம் அதிசயம் தானே
புதிய கிருபையால் என்னை தாங்குகின்றீரே
புதிய வழியில் நடத்துகின்றீரே
இது ஆச்சரியம் ஆச்சரியம் தானே
பரம குயவனே உமது கரங்களில்
என்னையும் கொடுத்து விட்டேனே
உம் சித்தம் போல என்னை நடத்துமே
அப்பா உம் கிருபைகளால் – என்னை
காத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால் – என்னை
அணைத்துக் கொண்டீரே
தாங்கி நடத்தும் கிருபையிது
தாழ்வில் நினைத்த கிருபையிது – 2
தந்தையும் தாயும் கைவிட்டாலும்
தயவாய் காக்கும் கிருபையிது – 2
வியாதியின் நேரத்தில் காத்த கிருபை
விடுதலை கொடுத்த தேவ கிருபை – 2
சூழ்நிலைகள் மாறினாலும்
மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை – 2
கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
கண்ணீரை மாற்றின தேவ கிருபை – 2
தடைகள் யாவையும் உடைத்து எறிந்து
வெற்றியை தந்திட்ட தேவ கிருபை – 2
என்னை நினைக்கும் கிருபையிது
என்னை நடத்தும் கிருபையிது - 2
தந்தையை போல தோளில் சுமந்து
என்னை நடத்தும் கிருபையிது - 2
அரசாளும் தெய்வம் அப்பா உம் பாதம்
ஆர்வமாய் வந்திருக்கிறேன்
உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
உள்ளம் மகிழ்ந்திருப்பேன்
1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா
2. பெலனே கன்மலையே
பெரியவரே என் உயிரே
3. நினைவெல்லாம் அறிபவரே
நிம்மதி தருபவரே
4. நலன் தரும் நல்மருந்தே
நன்மைகளின் ஊற்றே
5. மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா
மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா
6. விண்ணப்பம் கேட்பவரே
கண்ணீர் துடைப்பவரே
நன்றியோடு நல்ல தேவா
நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன்
நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன்
குறைவில்லாமல் நடத்தினீரே
தடை எல்லாம் நீர் அகற்றினீரே
என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன்
என் வாழ்வின் நாயகன் நீரே
உயர்விலும் தாழ்விலும்
என் துணையாக வந்தீரே
நிறைவிலும் என் குறைவிலும்
என் நம்பிக்கையானவரே
எல்லா நட்சத்திரங்கள் பெயர் அறிந்தவரே
என் முகத்தை உம் கையில் வரைந்தவரே
என்னை மறவாமல் நினைப்பவரே
சோதனையில் வேதனையில்
என் பக்கமாய் நின்றவரே
முன்னும் பின்னும் பாதுகாக்கும்
நல் கோட்டையாய் இருப்பவரே
எல்லா வியாதி பெலவீன நேரங்களில்
உன் பரிகாரி நானென்று சொன்னவரே
எனக்கும் ஜீவன் தந்தவரே
ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே- என்
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே – 2
குற்றங்களை மன்னித்தாரே
நோய்களை நீக்கினாரே
படுகுழியினின்று மீட்டாரே
ஜீவனை மீட்டாரே – 2
கிருபை இரக்கங்களால்
மணிமுடி சூட்டுகின்றார்
வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
திருப்தி ஆக்குகின்றார்
இளமை கழுகு போல
புதிதாக்கி மகிழ்கின்றார் – நம்
ஓடினாலும் நடந்தாலும்
பெலன் குறைவதில்லை – 2 – நாம்
கர்த்தர் தம் வழிகளெல்லாம் மோசேக்கு
வெளிப்படுத்தினார்
அதிசய செயல்கள் காணச் செய்தார்
ஜனங்கள் காணச் செய்தார்
எப்போதும் கடிந்து கொள்ளார்
குற்றங்களுக்கேற்ப நடத்துவதில்லை
மன்னித்து மறந்தாரே
தகப்பன் தன் பிள்ளைகள் மேல்
என்றென்றும் கோபம் கொண்டிரார்
தயவு காட்டுவது போல்
கருணை இரக்கம் காட்டுகிறார்
மறவாமல் நினைக்கின்றார்
அவரது பேரன்பு வானளவு
உயர்ந்துள்ளது
கிழக்கு மேற்கு தூரம்போல
அகற்றிவிட்டார் நம் குற்றங்கள்
ஆயிரம் ஆயிரம் நன்மைகள்
அனுதினமும் என்னை சூழ்ந்திட
கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே
நல்ல எபிநேசராய் என்னை
நடத்தி வந்தீரே
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
காலை மாலை எல்லாம் வேளையிலும்
என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்
தேவை பெருகும் போது சிக்கி
தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன்
எல்லா நெருக்கத்திலும் என்னை
விழாமல் காக்கும் அன்பின்
நல்ல கர்த்தரே
மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை
மிட்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை
தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும்
அன்பின் நல்ல கர்த்தரே
அல்லேலூயா கீதம் பாடுவேன்
என் ஆண்டவரைக் கொண்டாடுவேன்
தூக்கியெடுத்தார் சேற்றிலிருந்து
துதியின் கீதங்கள் நாவில் தந்தார்
ஆராதனை ஆராதனை என் இராஜாதி இராஜனுக்கே
ஆராதனை ஆராதனை என் தேவாதி தேவனுக்கே
துன்பமெல்லாம் போக்கிவிட்டாரே
துதியின் ஆடை எனக்குத் தந்தாரே
வாழ்த்திப்பாடுவேன் போற்றிப்பாடுவேன்
தாழ்வில் என்னை நினைத்தவரே
நன்றியால் உள்ளம் பொங்குதே
இயேசு ராஜாவை நெஞ்சம் தேடுதே
என்றும் பாடுவேன் எந்தன் இயேசுவே
எந்தன் வாழ்வில் எல்லாம் அவரே
உயிருள்ள நாட்களெல்லாம்
அவர் நாமம் உயர்த்திடுவேன்
கர்த்தர் செய்த நன்மைகளுக்காய்
காலமெல்லாம் துதித்திடுவேன்
அவர் சமுகம் என் சந்தோஷமே
அது நிறைவான சந்தோஷமே
என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழியுதே
ஆனந்தம் பேரானந்தமே
In his presence, there is fullness of joy (2)
My cup is overflowing
More than overflowing
Fullness blessed fullness of joy
இடைவிடா நன்றி உமக்குத்தான்
இணையில்லா தேவன் உமக்குத்தான்
என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கைவிட்டாலும் நன்றி ஐயா
தேடி வந்தீரே நன்றி ஐயா
தெரிந்துகொண்டீரே நன்றி ஐயா
நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
நிரந்தரமானீரே நன்றி ஐயா
என்னைக் கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா
நீதி தேவனே நன்றி ஐயா
வெற்றி வேந்தனே நன்றி ஐயா
அநாதி தேவனே நன்றி ஐயா
அரசாளும் தெய்வமே நன்றி ஐயா
நித்திய ராஜாவே நன்றி ஐயா
சத்திய தீபமே நன்றி ஐயா
இதயம் நன்றியுடன்
நிரம்பி துதித்திடுவோம்
மகிபன் இயேசுவையே
தினமே துதித்திடுவோம்
சென்ற நாளில் நன்மை செய்த
மன்னன் இயேசு தேவனே
பாதுகாத்தார் துணை நின்றார்
நன்றியோடு பாடுவோம்
தேவ ராஜ்யம் தேடி வந்தால்
தேவ நன்மை தங்கிடும்
துதி செய்தால் தடை நீங்கும்
தேவ ஆசீர் தங்கிடும்
ஆவி ஆத்மா உடல் யாவும்
பரிசுத்தம் காத்துமே
பரன் பாதம் போற்றி வாழ்த்தி
எந்த நாளும் பணிகுவோம்
கர்த்தர் சமூகம் காத்திருந்து
பெலன் பெற்று எழும்புவோம்
துதி செய்தால் சோர்வு நீங்கும்
கர்த்தர் நாமம் போற்றுவோம்