இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும் வந்ததே
மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் கிடைத்ததே
மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் பிறந்ததே
இம்மானுவேல் தேவன் நம்மோடு
பகலிலே மேக ஸ்தம்பமாய்
இரவிலே அக்கினி ஸ்தம்பமாய்
முன் செல்லும் தூதனாய் வழிநடத்தும்
மேய்ப்பனாய்
ஆறுகள் நான் கடக்கையில்
அக்கினி நான் நடக்கையில்
என்னை தூக்கி சுமக்க தகப்பன் என்னோடே
என்னை என்றும் காக்க நேசர் என்னோடே
அல்லேலூயா அவர் இம்மானுவேல்
இம்மானுவேல் என் தேசத்தோடே
இம்மானுவேல் என் குடும்பத்தோடே
பிறந்தார் பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்
1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார்
2. பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய்த் திகழ்ந்தார்
3. பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினத்தால்
மேலான நாமம் பெற்றார்
4. கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ
விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன்
5. குருவைத் தொடரும் சீஷர்களும்
குருபோல மாறிடுவார்
அவர் நாமம் தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம்
6. இயேசு பிறந்தார் உள்ளமதில்
இதை எங்கும் சாற்றிடுவோம்
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம்
பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல
இயேசுவே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும்
பதினாயிரங்களில் சிறந்தோர் – ஆ
1. காட்டு மரங்களில் கிச்சிலி போல்
எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்பம் ரசத்திலும் அதி மதுரம் – இயேசுவே
2. அவர் இடது கை என் தலை கீழ்
வலக்கரத்தாலே தேற்றுகிறார்
அவர் நேசத்தால் சோகமானேன்
என் மேல் பறந்த கோடி நேசமே – இயேசுவே
3. என் பிரியமே ரூபவதி
என அழைத்திடும் இன்ப சத்தம்
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் – இயேசுவே
4. என் நேசர் என்னுடையவரே
அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்
மணவாளியே வா என்பாரே
நானும் செல்வேன் அந்நேரமே – இயேசுவே
இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசம் செய்கிறாரே
தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே
தேவ ஆலயமும் அவரே
தூய ஒளிவிளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவநதியும் அவரே
மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தலமதுவே
என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே
சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடுமெய் சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் உம்மையே
முன்னோடியாய் இயேசு பரன்
மூலைக்கல்லாகி சீயோனிலே
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்
இதோ மனிதர்கள் மத்தியில் வாசம் செய்பவரே
எங்கள் நடுவிலே வசித்திட விரும்பிடும் தெய்வமே(தேவனே)
1. உமக்கு சிங்காசனம் அமைத்திட
உம்மை துதிக்கிறோம் இயேசுவே
பரிசுத்த அலங்காரத்துடனே
உம்மை தொழுகிறோம் இயேசுவே
எங்கள் மத்தியில் உலாவிடும்
எங்களோடு என்றும் வாசம் செய்யும்
தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை
ஐயா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க
உன்னதத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும்
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உன்டாகட்டும் – இந்தப்
செவிகளை நீர் திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம்
புவிதனிலே உம் விருப்பம்
பூரணமாகட்டுமே – இந்தப்
எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே
ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே – எங்கள்
தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும்
பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமே – இன்று
குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே
கறை போக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனே – பாவக்
வெள்ளி நடுவானில் ஜொலித்திட
மண்ணில் சந்தோஷம்
துள்ளி கொண்டாட தூதன் சொன்ன - 2
பிறப்பின் சுவிசேஷம்
இராஜாதி இராஜா பிறந்தாரைய்யா
யூதாவின் சிங்கம் உதித்தாரைய்யா - 2 - வெள்ளி நடுவானில்
1.மந்தையைக் கடந்து
சிந்தையில் மகிழ்ந்து
மேய்ப்பர்கள் நாம் போவோமய்யா
மனுக்கோலமாய் மகனாகிய
மகாராஜாவைப் பணிவோமய்யா - 2
சம்பூர்ணமே இனி சமாதானமே
இது இரட்சிப்பின் சந்தோஷமே
ஸ்தோத்திரப்போமே இயேசு இராஜாவையே
இது கிறிஸ்மஸ் கொண்டாட்டாமே - வெள்ளி நடுவானில்
2. பொன்னும் தூபமும் வெள்ளைப் போளமும்
பொக்கிஷமாய் தந்தோமைய்யா
தொழுவத்திலே சிறு பாலனை
எங்கள் கண்டார்கள் கண்டோமைய்யயா-2
எங்கள் இம்மானுவேலர் நீரே என்று
உள்ளம் களிகூர மகிழ்ந்தோமய்யா
என்றும் யூதரின் இராஜா நீரே என்று
எங்கும் பறைசாற்றித் துதிப்போமய்யா - வெள்ளி நடுவானில்
இயேசு மானிடனாய்ப் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்
1. மேய்ப்பர்கள் இராவினிலே
தங்கள் மந்தையாய் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே
தோன்றி தேவனை துதித்தனரே – இயேசு
2. ஆலொசனைக் கர்த்தரே
இவர் அற்புதமானவரே
விண் சமாதான பிரபு
சர்வ வல்லவர் பிறந்தனரே – இயேசு
3. மாட்டுத்தொழுவத்திலே
பரன் முன்னிலையில் பிறந்தார்
தாழ்மையை பின் பற்றுவோம்
அவர் ஏழையின் பாதையிலே – இயேசு
4. பொன் பொருள் தூபவர்க்கம்
வெள்ளை போளமும் காணிக்கையே
சாட்சியாய் கொண்டு சென்றே
வான சாஸ்திரிகள் பணிந்தனரே – இயேசு
5. அன்னாளும் ஆலயத்தில்
அன்று ஆண்டவரை அறிந்தே
தீர்க்கதரிசனமே
கூறி தூயனை புகழ்ந்தனளே – இயேசு
6. யாக்கோபிள் ஓர் நட்சத்திரம்
இவர் வாக்கு மாறாதவரே
கண்ணிமை நேரத்திலே
நம்மை விண்ணதில் சேர்த்திடுவார் – இயேசு