இயேசுவின் நாமம் இனிதான நமாம்
இணையில்லா நாமம் இன்ப நாமம்-எங்கள்
பாவத்தை போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்
பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம்
வானிலும் பூவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம்
நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நமாம்
முழங்கால் யாவும் முடங்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம்
சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
சாபப் பிசாசை துரத்திடும் நாமம்
இயேசுவே ஆண்டவர் இயேசுவே ஆண்டவர்
வானம் பூமி யாவையும்
தம் வார்த்தையாலே படைத்தார்
சர்வ சிருஷ்டியின் நாயகன்
சர்வ லோகத்தின் ஆண்டவர்
1. நம் இயேசுவால் கூடாதது
ஒன்றுமே இல்லையே
அவரையே நம்புவோம்
என்றென்றும் ஆராதிப்போம்
2. இயேசு நீதி நிறைந்தவர்
சமாதான காரணர்
சர்வ வல்லவர்
சகல அதிகாரம் உடையவர்
3. நம் இயேசுவைப் போலவே
வேறே இரட்சகர் இல்லையே
நம் இரட்சண்ய கன்மலை
அவரே நம் தஞ்சமே
உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்
வெட்கப்பட்டு போவதில்லை
உமது திரு நாமம் அறிந்தவர்கள்
கைவிடப்படுவதில்லை
நம்பினோரை நீர் மறப்பதில்லை
உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை
உடைந்த பாத்திரம் என்று
நீர் எவரையும் தள்ளுவதில்லை
ஒன்றுக்கும் உதவாதோர் என்று
நீர் எவரையும் சொல்லுவதில்லை
இயேசு மகா ராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே
ஏழைகளின் பெலன் நீரே
எளியோரின் நம்பிக்கை நீரே
திக்கற்றோர் வேதனை அறிந்து
உதவுடும் தகப்பன் நீரே
உம் நாமம் வாழ்க ராஜா
விண் தந்தையே
உம் அரசு வருக ராஜா
என் தந்தையே
யெகோவாயீரே
உம் நாமம் பரிசுத்தப்படுவதாக
யெகோவா நிசியே
எந்நாளும் வெற்றி தருவீர்
வாழ்க ராஜா அல்லேலூயா
அல்லேலூயா ஓசன்னா
யெகோவாரூவா
உம் நாமம் பரிசுத்தப்படுவதாக
யெகோவா ரஃப்பா
சுகம் தருபவர் நீர்
ராஜாதி ராஜா நீரே
உம் நாமம் பரிசுத்தப்படுவதாக
உயிரோடு எழுந்தவரே
வேகமாய் வாருமையா
மாரநாதா அல்லேலூயா
அல்லேலூயா ஓசன்னா
அழகானவர் அருமையானவர்
இனிமையானவர்
மகிமையானவர் மீட்பரானவர்
அவர் இயேசு இயேசு இயேசு
சேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் ராஜா
என்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலர்
இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர்
என்னுடையவர் என் ஆத்ம நேசரே
கன்மலையும் கோட்டையும்
துணையுமானவர்- ஆற்றித்
தேற்றிக் காத்திடும் தாயுமானவர்
என்றென்றும் நடத்திடும் எந்தன் ராஜா
என்னுடையவர் என் நேச கர்த்தரே
கல்வாரி மேட்டிலே கொல்கதாவிலே
நேசர் இரத்தம் சிந்தியே என்னை மீட்டார்
பாசத்தின் எல்லைதான் இயேசுராஜா
என்னுடையவர் என் அன்பு இரட்சகர்
அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே
அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே
கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியமிதே
என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை
சொல்லுபவரே -நடக்கும் வழிதனை
காட்டுபவரே நம்பி வந்தோனை
கிருபை சூழ்ந்து கொள்ளுதே
கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே
பாவங்களை பாராதென்னை பற்றி கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை
திரும்ப தந்தீரே – உற்சாக
ஆவி என்னை தாங்கச் செய்தீரே
எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் -தேவா
என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே
வானாதி வானங்கள் யாவும்
அதின் கீழுள்ள ஆகாயமும்
பூமியில் காண்கின்ற யாவும்
கர்த்தா உம்மைப் போற்றுமே
காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனி தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
நாதா உம்மை போற்றுமே
நீரினில் வாழ்கின்ற யாவும் -இந்
நிலத்தின் ஜீவ ராசியும்
பாரினில் பறக்கின்ற யாவும்
பரனே உம்மைப் போற்றுமே
வால வயதுள்ளானோரும் – மிகும்
வயதால் முதிர்ந்தோர்களும்
பாலகர் தம் வாயினாலும்
பாடி உம்மைப் போற்றுவாரே
போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
புதிய இதயமுடனே – நேற்றும்
இன்றும் என்றும் மாறா இயேசுவை
நாம் என்றும் பாடித்துதிப்போம்
இயேசுவென்னும் நாமமே
என் ஆத்துமாவின் கீதமே
என் நேசரேசுவை நான் என்றும்
போற்றி மகிழ்ந்திடுவேன்
கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில் – காக்கும்
கரம்கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
அன்பை என்றும் பாடுவேன்
யோர்தான் நதிபோன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
ஆர்ப்பின் ஜெய தொனியோடே
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன்
தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன்
பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால் – ஆவி
ஆத்துமாவும் தேகம் யாவும் இன்று
ஈந்து தொண்டு செய்குவேன்
நான் நேசிக்கும் தேவன்
இயேசு என்றும் ஜீவிக்கிறார்
அவர் நேற்றும் இன்றும் நாளை
என்றும் மாறாதவர்
நான் பாடி மகிழ்ந்திடுவேன்
என் இயேசுவைத் துதித்திடுவேன்
என் ஜீவிய காலமெல்லாம்
அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்
கடலாம் துன்பத்தில் தவிக்கும்
வேளையில் படகாய் வந்திடுவார்
இருள் தனிலே பகலவனாய்
இயேசுவே ஒளி தருவார்
பாவ நோயாலே வாடும் நேரத்தில்
மருத்துவராகிடுவார்
மயங்கி விழும் பசிதனிலே
மன்னாவைத் தந்திடுவார்
தூற்றும் மாந்தரின் நடுவில்
எந்தனை தேற்றிட வந்திடுவார்
கால் தளர ஊன்றுகோலாய்
காத்திட வந்திடுவார்
நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க
நான் இனி கலங்கிடேனே
எந்தனுக்கே காவல் அவர்
நான் உடல் அவர் உயிரே