அடைக்கலமே உமதடிமை நானே

S-50 | T-120 | D Major
அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே

அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே

கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியமிதே

என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை
சொல்லுபவரே -நடக்கும் வழிதனை
காட்டுபவரே நம்பி வந்தோனை
கிருபை சூழ்ந்து கொள்ளுதே

கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே

பாவங்களை பாராதென்னை பற்றி கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை
திரும்ப தந்தீரே – உற்சாக
ஆவி என்னை தாங்கச் செய்தீரே
90
Tamil Christian Songs | CMM Choir
Made with ❤️ by Alpha Foster