ஜெபம்
20 songs
பாடல் - 1

யெகோவா நிசியே எந்தன் ஜெயக்கொடியே

S-116 T- 116 D Major
யெகோவா நிசியே எந்தன் ஜெயக்கொடியே
உமக்கே ஆராதனை
யெகோவாயீரே தேவைகளை சந்திப்பீர்
உமக்கே ஆராதனை

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூ அல்லேலூ அல்லேலூயா

1. ஜெபத்தின் காரணரே ஆராதனை
ஜெபிக்க வைத்தவரே ஆராதனை
ஜெபமே சுவாசமே ஜெபமே தூபமே
ஜெபத்தின் வீரரே ஆராதனை

2. அழகில் உன்னதரே ஆராதனை
அணைக்கும் ஆதரவே ஆராதனை
அன்பின் ராஜனே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவே ஆராதனை

3. சர்வ வல்லவரே ஆராதனை
சாட்சியாய் மாற்றினீரே ஆராதனை
சாத்தானை ஜெயித்தவரே
சாவை வென்றவரே
சர்வ சிருஷ்டிகரே ஆராதனை
பாடல் எழுதியவர்:
Melvin Manesh
29
பாடல் - 2

உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்

S-18 | T-101 | E Minor
உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்
பிரகாசமடைகின்றேன்

அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை -ஒருநாளும்

கண்கள் நீதிமானை பார்க்கின்றன
செவிகள் மன்றாட்டை கேட்கின்றன
இடுக்கண் நீக்கி விடுவுக்கின்றீர்
இறுதிவரை நீர் நடத்திச் செல்வீர் -அவமானம்

உடைந்த நொந்த உள்ளத்தோடு
கூடவே இருந்து பாதுகாக்கின்றீர்
அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும்
அனைத்தினின்றும் நீர் விடுவிக்கின்றீர்

நல்லவர் இனியவர் என் ஆண்டவர்
நாளெல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன்
உண்மையாய்க் கர்த்தரைத் தேடும் எனக்கு
ஒரு நன்மையும் குறைவதில்லையே

*** துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் எவ்வேளையும்
நன்றிக்கீதம் எந்நாவில் எந்நேரமும்
என் ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
அகமகிழ்வார்கள் துன்பப்படுவோர்

*** தேடினேன் கூப்பிட்டேன் பதில் தந்தீரே
பயங்கள் நீக்கிப் பாதுகாத்தீரே
எலும்புகள் நரம்புகள் முறிந்திடாமல்
யேகோவா தேவன் பார்த்துக் கொள்வீர்
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
51
பாடல் - 3

அனைத்தையும் அருளிடும்

S-113 | T-114 | F minor
அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே

யெஹோவா யீரே – (4)

1. புல்லுள்ள இடங்களில் எந்தனை
நித்தமும் சுகமாய் நடத்திடும்
மேய்ப்பனை போல் என்னை சுமந்திடும்
என் தேவனே

2. செட்டையின் நிழலில் அடைக்கலம்
தீங்குகள் நேராமல் காத்திடும்
கழுகினைப் போல் என்னை சுமந்திடும்
என் தேவனே

3. சிலுவையில் எந்தன் நோய்களை
சுமந்தீர் உந்தன் சரீரத்தில்
அன்றே நான் சுகமானேனே
என் தேவனே

4. தேவனால் பிறந்தவன் எவனுமே
உலகத்தை ஜெயிப்பவன் என்றுமே
மலைகளையும் பதராக்குவேன்
என் தேவனே
61
பாடல் - 4

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே

S-24 | T-106 | G Major | Original: D Major
அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே
நீர் நினைத்தது ஒரு நாளும் தடை படாதையா

நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்
எனக்கென முன்குறித்த எதையுமே
எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்
உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்

நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கு
காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்
நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர்

என்னைப் புடமிட்டால் பொன்னாக துலங்கிடுவேன்
நான் போகும் பாதைகளை அறிந்தவரே
உந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன்

நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே
காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே – என்னை
அடித்தாலும் அணைக்கின்ற அன்பரே

என் மீட்பரே உயிரோடு இருப்பவரே
இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை
என் கண்கள் தானே அந்நாளில் காணுமே
எப்போது வருவீரையா
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
69
பாடல் - 5

அன்பே அன்பே அன்பே

F Major
அன்பே, அன்பே, அன்பே
ஆருயிர் உறவே!
ஆனந்தம் ஆனந்தமே

1. ஒரு நாளுந்தயை கண்டேனையா
அன்னா ளெனை வெறுத்தேனையா
உம் தயை பெரிதையா – என் மேல்
உம் தயை பெரிதையா – அன்பே

2. பரலோகத்தின் அருமைப் பொருளே
நரலோகரி லன்பேனையா
ஆழம் அறிவேனோ – அன்பின்
ஆழம் அறிவேனோ – அன்பே

3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே – என்னையும்
அணைத்தீர் அன்பாலே – அன்பே

4. பூலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின் பூவைப் போல்
வாடாதே ஐயா – அன்பு
வாடாதே ஐயா – அன்பே

5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற் கியலாதாகில் யான்
இசைக்கவும் எளிதாமோ பரத்தில்
இசைக்கவும் எளிதாமோ – அன்பே
33
பாடல் - 6

அபிஷேக ஒலிவ மரம்

S-139 | T-138 | D Minor
அபிஷேக ஒலிவ மரம்
உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
உம் அன்பயே நம்புவன் – நான் உம்

உம் வசனம் தான் பசி ஆற்றும் உணவு
உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர் – 2
நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
நீரே என் ஜீவனின் பெலனானீர் – 2

காப்பாற்றும் காவலர் நீரே
அயராது நீர் பாய்ச்சுவீரே – என்னை – 2
என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே
எந்த சேதம் இன்றி காப்பவரே – 2

பெலன் தரும் புகலிடம் நீரே
உம்மில் வேரூன்ற கிருபை செய்தீரே – 2
மலர்ந்திடுவேன் நான் கனிகொடுப்பேன்
(இந்த) உலகம் எங்கும் நான் பலன் கொடுப்பேன் – 2
பாடல் எழுதியவர்:
Joseph Aldrin
51
பாடல் - 7

அப்பா என்னை முழுவதும்

அப்பா என்னை முழுவதும் 
அர்ப்பணித்தேன் ஐயா
உயிரோடிருக்கும் நாளெல்லாம் 
உமக்குச் சொந்தமையா

அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன்
ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் – என்

1. உள்ளம் உடல் எல்லாமே
உமக்குத் தந்தேனையா
கள்ளம் கபடு இல்லாமல்
காத்துக் கொள்ளுமையா – ஒரு

2. உலகப்பெருமை சிற்றின்பம்
உதறி விட்டேனையா
கசப்பு வெறுப்பு காயங்கள்
கடந்து போனதையா

3. வாக்குவாதம் பொறாமைகள்
தூக்கி எறிந்தேன் நான்
ஆண்டவர் இயேசுவை ஆடையாய்
அணிந்து கொண்டேன் நான்

4. உமக்காய் வாழும் வைராக்கியம்
உள்ளத்தில் வந்ததையா
எனக்காய் வாழும் எண்ணங்கள்
என்றோ மடிந்ததையா (செத்ததையா)
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
46
பாடல் - 8

அழைத்தவரே அழைத்தவரே

அழைத்தவரே! அழைத்தவரே!
என் ஊழியத்தின் ஆதாரமே

எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன்
உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன்

வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாம்
பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாம்
ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே

விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும்
மலைபோன்ற தேவைகள் சபை நடுவில் நின்றாலும்
அழைத்தவர் என்றுமே விலகுவதில்லையே
கிருபையின் வரங்களும் குறைவதும் இல்லையே
28
பாடல் - 9

ஆதாரம் நீர் தான் ஐயா

ஆதாரம் நீர் தான் ஐயா
என் துறையே
ஆதாரம் நீர் தான் ஐயா – 2

1. சொத்தாம் உலகில் நான் தீதால் மையங்களில் – 2

ஆதாரம் நீர் தான் ஐயா
என் துறையே
ஆதாரம் நீர் தான் ஐயா

2. சோதனை அடர்ந்து வேதனை தொடர்ந்து – 2
துக்கம் மிகும் வேலையில் – என் சுகிர்தாமே – 2
உம் தாசனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா

3. நாம் நாம் துணை என நயந்துறை சொன்னவர் – 2
நட்டாற்றில் விட்டார் ஐயா – தனியனாய் – 2
தனியனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா

4. கற்றோர் பெருமையே மற்றோர் அருமையை – 2
வற்ற கிருபை நதியே – என் பதியே – 2
என் பதியே ஆதாரம் நீர் தான் ஐயா
43
பாடல் - 10

ஆராதனை ஆராதனை ஆவியோடு

S-29 | T- 102 | E Minor
ஆராதனை ஆராதனை
ஆவியோடு ஆராதிக்கிறோம்
ஆராதனை ஆராதனை
உண்மையோடு ஆராதிக்கிறோம்

ஆராதனை

சத்திய தேவனே உம்மை உயர்த்தி
தூய ஆவியோடு ஆராதிக்கிறோம்
நித்திய தேவனே உம்மை உயர்த்தி
உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம்

யெகோவா யீரே பார்த்துக்கொள்வீர்
தூய ஆவியோடு ஆராதிக்கிறோம்
யெகோவா நிசியே வெற்றி தருவீர்
உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம்

யெகோவா ருவா நல்மேய்ப்பரே
தூய ஆவியோடு ஆராதிக்கிறோம்
யெகோவா ரஃப்பா சுகம் தருவீர்
உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம்
பாடல் எழுதியவர்:
Chandra Sekaran
50
பாடல் - 11

அவர் எந்தன் சங்கீதமானவர்

S-128 | T-118 | E minor
அவர் எந்தன் சங்கீதமானவர்
பெலமுள்ள கோட்டையுமாம்
ஜீவனின் அதிபதியான அவரை
ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்

துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே
வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்
திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே

இரண்டு மூன்று பேர் எந்தன் நாமத்தினால்
இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்
இருப்பேன் என்றவர் நமது தேவன்
இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம்

வானவர் கிறிஸ்தேசு நாமமதை
வாழ்நாள் முழுவதும் வாழ்த்திடுவோம்
வருகையில் அவரோடு இணைந்து என்றும்
வணங்குவோம் வாழ்த்துவோம்
போற்றிடுவோம்
107
பாடல் - 12

ஆறுதலின் தெய்வமே

ஆறுதலின் தெய்வமே
உம்முடைய திருச்சமூகம்
எவ்வளவு இன்பமானது

1. ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி
ஆர்வமுடன் கதறுகின்றது
உள்ளமும் உடலும் ஒவ்வொரு நாளும்
கெம்பீரித்து சத்தமிடுது – ஆமென்

2. உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்
உண்மையிலே பாக்கியவான்கள்
தூய மனதுடன் துதிப்பார்கள்
துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென்

3. உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
உண்மையிலே பாக்கியவான்கள்
ஓடினாலும் களைப்படையார்
நடந்தாலும் சோர்வடையார் – ஆமென்

4. கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
களிப்பான நீருற்றாய் மாற்றிக்கொள்வார்கள்
வல்லமை மேலே வல்லமை கொண்டு
சீயோனைக் காண்பார்கள் – ஆமென்

5. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது
ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்
வாசலில் காத்திருப்பேன் – ஆமென்
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
49
பாடல் - 13

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
இப்போ வாரும் இறங்கி வாரும்
எங்கள் மத்தியிலே

உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே 

பத்மு தீவினிலே பக்தனைத் தேற்றினீரே
என்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே

சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே
ஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே

நேசரின் மார்பினிலே இனிதாய் சாய்ந்திடவே
ஏக்கமுற்றேன் விரும்பி வந்தேன் உந்தன் பாதத்திலே

ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே
எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே
17
பாடல் - 14

ஆவியானவரே அன்பு நேசரே

6/8 | D Major | Custom: C# Major
ஆவியானவரே அன்பு நேசரே
ஆட்கொண்டு நடத்துமையா

உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்
உம் வழிகள் கற்றுத் தாரும்
உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே
தினந்தினம் நடத்துமையா

கண்ணின்மனி போல காத்தருளும்
கழுகு போல சமந்தருளும்
உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
எந்நாளும் மூடிக் கொள்ளும்

வெயில் நேரத்தில் குளிர் நிழலே
புயல்காற்றில் புகலிடமே
கடுமழையில் காப்பகமே
நான் தங்கும் கூடாரமே

நியாயத் தீர்ப்பின் ஆவியானவரே
சுட்டெரிக்கும் ஆவியானவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும்
பரிசுத்த ஆவியானவரே

வியத்தகு உம் பேரன்பை
எனக்கு விளங்கப்பண்ணும்
என் இதயம் ஆய்ந்தறியும்
புடமிட்டு பரிசோதியும்
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
22
பாடல் - 15

இதோ மனிதர்கள் மத்தியில் வாசம் செய்பவரே

S-23 | T-80 | A Major
இதோ மனிதர்கள் மத்தியில் வாசம் செய்பவரே
எங்கள் நடுவிலே வசித்திட விரும்பிடும் தெய்வமே(தேவனே)

1. உமக்கு சிங்காசனம் அமைத்திட
உம்மை துதிக்கிறோம் இயேசுவே
பரிசுத்த அலங்காரத்துடனே
உம்மை தொழுகிறோம் இயேசுவே

எங்கள் மத்தியில் உலாவிடும்
எங்களோடு என்றும் வாசம் செய்யும்
பாடல் எழுதியவர்:
Wesley Maxwell
54
பாடல் - 16

இராஜா உம் மாளிகையில்

S-14 | T-93 | G minor
இராஜா உம் மாளிகையில்
இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் இயேசு
துதித்து மகிழ்ந்திருப்பேன்
துயரம் மறந்திருப்பேன் உம்மை

என் பெலனே என் கேட்டையே
ஆராதனை உமக்கே
மறைவிடமே என் உறைவிடமே
ஆராதனை உமக்கே

ஆராதனை ஆராதனை
அப்பா அப்பா உங்களுக்குத்தான்

எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம்
ஆராதனை உமக்கே
எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு
ஆராதனை உமக்கே

பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்
ஆராதனை உமக்கே
உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு
ஆராதனை உமக்கே

சீர்ப்படுத்தும் சிருஷ்டிகரே
ஆராதனை உமக்கே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே
ஆராதனை உமக்கே

உன்னதரே உயர்ந்தவரே
ஆராதனை உமக்கே
பரிகாரியே பலியானீரே
ஆராதனை உமக்கே

தாழ்மையிலே நினைத்தவரே
ஆராதனை உமக்கே
ஏழ்மையை மாற்றினீரே
ஆராதனை உமக்கே
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
57
பாடல் - 17

உன்னத தேவனே என் இயேசு ராஜனே

S-2 | T-94 | F Major
உன்னத தேவனே என் இயேசு ராஜனே
உம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா

1. உம் அன்பைப் பருகிட
ஓடோடி வந்துள்ளேன் உம்மாக மாறிட உலகை மறக்கிறேன்

இரவெல்லாம் பகலெல்லாம் இதயம்
உமக்காக துடிக்குதையா
நினைவெல்லாம் பேச்செல்லாம்
நேசரே உம்மைப் பற்றித்தானே ஐயா

2. தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே

3. பேரின்பக் கடலிலே ஓய்வின்றி மூழ்கணும்
துதித்து மகிழணும் தூயோனாய் வாழணும்

4. மறுரூபமாக்கிடும் மகிமையின் மேகமே
உம்முக சாயலாய் உருமாற்றும் தெய்வமே

5. கொடியாக படரணும் உந்தன் நேசமே
மடிமீது தவழணும் மழலைக் குழந்தை நான்

6. ஐயா உம் நிழலிலே ஆனந்த பரவசம்
அளவிடா பேரின்பம் ஆரோக்கியம் அதிசயம்
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
65
பாடல் - 18

உம் பீடத்தை சுற்றிச் சுற்றி

S-142 | T-148 | D Major
உம் பீடத்தை சுற்றிச் சுற்றி
நான் வருகிறேன் தெய்வமே
கறைகளெல்லாம் நீங்கிட
என் கைகளைக் கழுவுகிறேன்

என் தெய்வமே இயேசு நாதா
இதயமெல்லாம் மகிழுதையா

உரத்த குரலில் நன்றிப் பாடல்
பாடி மகிழ்கிறேன்
வியத்தகு உம் செயல்களெல்லாம்
எடுத்து உரைக்கிறேன்

*** உந்தன் மாறாத பேரன்பு
என் கண்முன் இருக்கிறது
உம் திருமுன்னே உண்மையாக
வாழ்ந்து வருகிறேன்

கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன்
தடுமாற்றம் எனக்கில்லை
உந்தன் சமூகம் உந்தன் மகிமை
உண்மையாய் ஏங்குகின்றேன்
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
57
பாடல் - 19

என்னால் ஒன்றும் கூடாதென்று

C Major
என்னால் ஒன்றும் கூடாதென்று
என்னை நான் தந்து விட்டேன்
உம்மால் எல்லாம் கூடுமென்று
உம்மை நான் நம்பியுள்ளேன்

1. எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்லாம் செய்பவரே
இல்லாதவைகளை இருக்கின்றதாய்
வரவழைப்பவரே
ஆபிரகாமுக்கு செய்தவர்
எனக்கும் செய்ய வல்லவர்

2. யெகோவா யீரே
எல்லாம் பார்த்துகொள்வார்
தேவையை நிறைவாக்குவார்
கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து
ஏற்றதாய் பெலன் தருவார்
அன்னாளை களிப்பாய் மாற்றினவர்
என்னையும் மாற்றிடுவார்

3. எல்ரோயீ என்னை காண்பவரே
என் கண்ணீர் துடைப்பவரே
கருமுதலாய் என்மேல் கண் வைத்து
நன்மைகள் செய்பவரே
ஆகாரின் கண்ணீரை மாற்றினவர்
என் கண்ணீர் மாற்றிடுவார் 
பாடல் எழுதியவர்:
Davidsam Joyson
44
பாடல் - 20

விண்ணப்பத்தைக் கேட்பவரே

விண்ணப்பத்தைக் கேட்பவரே – என்
கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா

1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்

2. மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே

3. சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்

4. என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா

5. குருடர்களை பார்க்கச் செய்தீர்
முடவர்கள் நடக்கச் செய்தீர்

6. உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரம்
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
27
Made with ❤️ by Alpha Foster