உம் பீடத்தை சுற்றிச் சுற்றி
நான் வருகிறேன் தெய்வமே
கறைகளெல்லாம் நீங்கிட
என் கைகளைக் கழுவுகிறேன்
என் தெய்வமே இயேசு நாதா
இதயமெல்லாம் மகிழுதையா
உரத்த குரலில் நன்றிப் பாடல்
பாடி மகிழ்கிறேன்
வியத்தகு உம் செயல்களெல்லாம்
எடுத்து உரைக்கிறேன்
*** உந்தன் மாறாத பேரன்பு
என் கண்முன் இருக்கிறது
உம் திருமுன்னே உண்மையாக
வாழ்ந்து வருகிறேன்
கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன்
தடுமாற்றம் எனக்கில்லை
உந்தன் சமூகம் உந்தன் மகிமை
உண்மையாய் ஏங்குகின்றேன்
அரசாளும் தெய்வம் அப்பா உம் பாதம்
ஆர்வமாய் வந்திருக்கிறேன்
உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
உள்ளம் மகிழ்ந்திருப்பேன்
1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா
2. பெலனே கன்மலையே
பெரியவரே என் உயிரே
3. நினைவெல்லாம் அறிபவரே
நிம்மதி தருபவரே
4. நலன் தரும் நல்மருந்தே
நன்மைகளின் ஊற்றே
5. மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா
மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா
6. விண்ணப்பம் கேட்பவரே
கண்ணீர் துடைப்பவரே
என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே (2)
உயிருள்ள நாளெல்லாமே
துதிகன மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம்
மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி
ஆராதனை செய்கிறோம்
இரக்கம் உள்ளவரே
மனதுருக்கம் உடையவரே
நீடிய சாந்தம், பொறுமை அன்பு
நிறைந்து வாழ்பவரே
கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே
உண்மையாய் கூப்பிடும்
குரல்தனை கேட்டு
விடுதலை தருபவரே
உலகத்தோற்ற முதல்
எனக்காய் அடிக்கப்பட்டீர்
துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு
புதுவாழ்வு தந்து விட்டீர்
உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்
என்னை விடுவிப்பீர் நிட்சயமாய்
உந்தன் நாமத்தை அறிந்ததனால்
வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் – 2
ஏஷுவா ஏஷுவா
உந்தன் நாமம் பலத்த துருகம் 2
நீதிமான் நான் ஓடுவேன்
ஓடி அதற்குள் சுகம் காணுவேன் – 2
ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு
பதில் அழிப்பீர் வெகு விரைவில் – 2
என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர்
தலை நிமிர செய்திடுவீர் – 2
வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்
அணுகாமலே தப்புவிப்பீர் – 2
உமது சிறகுகளாலே
என்னை மூடி மறைத்து கொள்ளுவீர்- 2
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மை போற்றிடுவோம்
என்றென்றும் பணிந்து தொழுவோம்
ஆ ஆ ஆ.. அல்லேலூயா ஆமென்
வானம் பூமி ஒழிந்து போனாலும்
உம் வார்த்தை என்றும் மாறாதே
இவ்வாழ்க்கை அழிந்து மறைந்து போம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான்
சாத்தான் உன்னை எதிர்த்த போதும்
ஜெயகிறிஸ்து உன்னோடு உண்டே
தோல்வி என்றும் உனக்கில்லையே
துதி கானம் தொனித்து மகிழ்வாய்
கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே
ஆவி ஆத்துமா சரீரம் உம் சொந்தமே
அதை சாத்தான் தொடாமல் காப்பீரே
எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
எங்கள் இதயத்தை உம்மிடம்
படைக்கின்றோமே – ஏங்குகின்றோம்
உம் ஆசீர் பெறவே
அரியணையில் வீற்றிருப்பவரே
உமக்கே ஆராதனை
ஆட்டுக்குட்டியானவரே உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
அடைக்கலமானவரே
படைகளின் ஆண்டவரே
இடுக்கண் வேளையிலே
ஏற்ற துணை நீரே - உமக்கே
பக்கம் நின்று வலுவூட்டுகிறீர்
பாதுகாத்து பெலப்படுத்துகிறீர்
தீமை அணுகாமல் காத்து
சேர்த்திடுவீர் பரலோகம்
எரிகின்ற அக்கினிச் சூளை
எதுவும் என்னைத் தொடுவதில்லை
ஆராதிக்கும் எங்கள் தெய்வம்
எப்படியும் காப்பாற்றுவீர் - நாங்கள்
நீர் செய்ய நினைத்ததெல்லாம்
தடைபடாது என்றறிவேன்
சகலத்தையும் செய்ய வல்லவர்
அனைத்தையும் செய்து முடிப்பவர்
இதோ மனிதர்கள் மத்தியில் வாசம் செய்பவரே
எங்கள் நடுவிலே வசித்திட விரும்பிடும் தெய்வமே(தேவனே)
1. உமக்கு சிங்காசனம் அமைத்திட
உம்மை துதிக்கிறோம் இயேசுவே
பரிசுத்த அலங்காரத்துடனே
உம்மை தொழுகிறோம் இயேசுவே
எங்கள் மத்தியில் உலாவிடும்
எங்களோடு என்றும் வாசம் செய்யும்
உம்மை ஆராதிக்கின்றோம்
ஏசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை போல் வேரு தெய்வம் இல்லை
ஹாலேலூயா ஹாலேலூயா -2
என்னை அழைத்தவரே
நீர் உண்மை உள்ளவரே
உந்தன் பரிசுத்த ஆவியால்
என்னையும் நிறைத்தீரே
என்னை மறுரூபமாக்கிடும்
உந்தன் மகிமையில் சேர்த்திடும்
பாவியான என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றீனீர்
நன்றிபலிபீடம் கட்டுவோம்
நல்லதெய்வம் நன்மை செய்தார்
செய்த நன்மைகள் ஆயிரங்கள்
சொல்லி சொல்லி பாடுவேன்
நன்றி தகப்பனே நன்மை செய்தீரே
ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்
பாவம் நீங்கிட கழுவி விட்டீர்
உமக்கென்று வாழ பிரித்தெடுத்து
உமது ஊழியம் செய்ய வைத்தீர்
பார்க்கும் கண்களை தந்தீரய்யா
பாடும் உதடுகள் தந்தீரய்யா
உழைக்கும் கரங்களை தந்தீரய்யா
ஓடும் கால்களைத் தந்தீரய்யா
புதிய உடன்பாட்டின் அடையாளமாய்
புனித இரத்தம் ஊற்றினீரே
சத்திய ஜீவ வார்த்தையாலே
மரித்த வாழ்வையே மாற்றினீரே
இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்
இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர்
உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு
உரிமை சொத்தாக வைத்துக் கொண்டீர்
உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்
வெட்கப்பட்டு போவதில்லை
உமது திரு நாமம் அறிந்தவர்கள்
கைவிடப்படுவதில்லை
நம்பினோரை நீர் மறப்பதில்லை
உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை
உடைந்த பாத்திரம் என்று
நீர் எவரையும் தள்ளுவதில்லை
ஒன்றுக்கும் உதவாதோர் என்று
நீர் எவரையும் சொல்லுவதில்லை
இயேசு மகா ராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே
ஏழைகளின் பெலன் நீரே
எளியோரின் நம்பிக்கை நீரே
திக்கற்றோர் வேதனை அறிந்து
உதவுடும் தகப்பன் நீரே
அன்பின் தெய்வமே என்னை
நடத்தும் தெய்வமே – நன்றியோடு
உம்மைப் பாடுவேன் -நான்
பிறந்த நாள்முதல் இந்தநாள் வரை
எத்தனையோ நன்மை செய்தீரே
ஐயா எத்தனையோ நன்மை செய்தீரே
சிறுமையானவனைத் தூக்கி எடுத்தீரே
அளவில்லாமல் ஆசீர்வதித்தீரே
இது அதிசயம் அதிசயம் தானே
புதிய கிருபையால் என்னை தாங்குகின்றீரே
புதிய வழியில் நடத்துகின்றீரே
இது ஆச்சரியம் ஆச்சரியம் தானே
பரம குயவனே உமது கரங்களில்
என்னையும் கொடுத்து விட்டேனே
உம் சித்தம் போல என்னை நடத்துமே
என்னைக் காண்பவரே தினம் காப்பவரே
ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்
நான் அமர்வதும் நான் எழுவதும் நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்
எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
எல்லாமே அறிந்திருக்கின்றீர்
நடந்தாலும் படுத்தாலும் அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்
நன்றி ராஜா இயேசு ராஜா
முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கிச் சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்
உம் திருக்கரத்தால் தினமும் என்னைப் பற்றி பிடித்திருக்கின்றீர்
கருவை உம் கண்கள் கண்டன மறைவாய் வளர்வதைக் கவனித்தீரே
அதிசயமாய் பிரமிக்கத்தக்கப் பக்குவமாய் உருவாக்கினீர்
என் நேசர் நீர்தானையா
நேசிக்கிறேன் உம்மைத்தானையா
எனது ஆன்மா உம்மை நினைத்து
எந்நாளும் ஏங்குதையா
எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன்
நடுராவிலும் தியானிக்கின்றேன்
உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர்
நன்றி இயேசைய்யா
உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்
இனி நானல்ல எல்லாம் நீரே
துன்பமோ துயரமோ வேதனையோ
உம்மை விட்டு பிரிப்பதில்லை
உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன்
வேறெதற்கும் நான் அடிமைப்படேன்
நீர்தான் என் தஞ்சமே
நீர்தான் என் கோட்டையே
துன்ப வேளை தூக்கி என்னை
தோளில் சுமந்தவரே
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
இயேசையா உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
நீர்தான் என் பெலனே
நீர்தான் என் சுகமே
கண்ணீர் துடைத்து
கவலை போக்கி ஆறுதல் அளிப்பவரே
நீரே என் ஆதாரமே
நீரே என் துணையாளரே
சோர்ந்திடும் நேரம் சார்ந்திட உந்தன்
கிருபை ஈந்தவரே
இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
என் நேசரே உம்மை பாடிடுவேன்
நீர் செய்த எல்லா நன்மைகட்காக
உமக்கே ஆராதனை
கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்
அவர் பேரன்பு என்றுமுள்ளது
ஒருவராய் மாபெரும்
அதிசயங்கள் செய்தாரே
வானங்களை ஞானமாய்,
உண்டாக்கி மகிழ்ந்தாரே
இன்று போற்றிப் புகழுவோம்
நாம் உயர்த்தி மகிழுவோம் (2)
பகலை ஆள்வதற்கு,
கதிரவனை உருவாக்கினார்
இரவை ஆள்வதற்கு
சந்திரனை உருவாக்கினார்
செங்கடலை இரண்டாக
பிரித்து நடக்கச்செய்தார்
பார்வோனையும் படைகளையும்
அதிலே மூழ்கடித்தார்
வனாந்திரப் பாதையில்,
ஜனங்களை நடத்திச் சென்றார்
எதிரியின் கையினின்று
விடுவித்துக் காத்துக்கொண்டார்
தாழ்மையில் இருந்த
நம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார்
உடல் கொண்ட அனைவருக்கும்
உணவு ஊட்டுகிறார்.