கல்வாரி
18 songs
பாடல் - 1

பலிபீடத்தில் என்னைப் பரனே

பலிபீடத்தில் என்னைப் பரனே
படைக்கிறேனே இந்த வேளை
அடியேனை திருச்சித்தம் போல
ஆண்டு நடத்திடுமே (2)

கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன் (2)
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கரை நீங்க இருதயத்தை (2)

1. நீரன்றி என்னாலே பாரில்
ஏதும் நான் செய்திட இயலேன்
சேர்ப்பீரே வழுவாது என்னைக்
காத்துமக்காய் நிறுத்தி (2) – கல்வாரியின்

2. ஆவியோடாத்மா சரீரம்
அன்பரே உமக்கென்றும் ஈந்தேன்
ஆலய மாக்கியே இப்போ
ஆசீர்வதித்தருளும் (2) – கல்வாரியின்

3. சுயமென்னில் சாம்பலாய் மாற
சுத்தாவியே அனல் மூட்டும்
ஜெயம் பெற்று மாமிசம் சாக
தேவா அருள் செய்குவீர் (2) – கல்வாரியின்

4. பொன்னையும் பொருளையும் விரும்பேன்
மண்ணின் வாழ்வையும் நான் வெறுத்தேன்
மன்னவன் இயேசுவின் சாயல்
இந்நிலத்தே கண்டதால் (2) – கல்வாரியின்
41
பாடல் - 2

இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது

இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது

1. உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அடிகள் பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் – இயேசு கிறிஸ்துவின்

2. பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா – இயேசு கிறிஸ்துவின்
53
பாடல் - 3

மாறிடா எம்மா நேசரே

S-53 | T-107 | E Major
மாறிடா எம்மா நேசரே- ஆ
மாறாதவர் அந்பெந்நாளுமே
கல்வாரிச் சிலுவை மீதிலே
காணுதே இம்மா அன்பிதே – ஆ

ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதன் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணையேதும் வேறில்லையே
இணை ஏதும் வேறில்லையே

பாவியாக இருக்கையிலே – அன்பால்
பாரில் உன்னைத் தேடி வந்தாரே
நீசன் என்றுன்னைத் தள்ளாமலே
நேசனாக மாற்றிடவே

உள்ளத்தால் அவரைத் தள்ளினும் – தம்
உள்ளம் போல் நேசித்ததினால்
அல்லல் யாவும் அகற்றிடவே
ஆதி தேவன் பலியானாரே

ஆவியால் அன்பைப் பகிர்ந்திட – தூய
தேவனின் விண் சாயல் அணிய
ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
ஆவலாய் அவரைச் சந்திக்க

நியாய விதி தினமதிலே – நீயும்
நிலையாகும் தைரியம் பெறவே
பூரணமாய் அன்பு பெருக
புண்ணியரின் அன்பு வல்லதே

பயமதை நீக்கிடுமே – யாவும்
பாரினிலே சகித்திடுமே
அது விசுவாசம் நாடிடுமே
அன்பு ஒருக்காலும் ஒழியாதே
39
பாடல் - 4

அப்பா உம்மை நேசிக்கிறேன்

அப்பா உம்மை நேசிக்கிறேன்
ஆர்வமுடன் நேசிக்கிறேன்

1. எப்போதும் உம் புகழ்தானே
எந்நேரமும் ஏக்கம் தானே
எல்லாம் நீர்தானே – ஐயா

2. பலியாகி என்னை மீட்டிரையா
பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா
ஒளியாய் வந்தீரையா – ஐயா

3. உந்தன் அன்பு போதுமையா
உறவோ பொருளோ பிரிக்காதையா
என் நேகர் நீர்தானையா – ஐயா

4. கண்ணீர் துடைக்கும் காருண்யமே
மன்னித்து மறக்கும் தாயுள்ளமே
விண்ணக பேரின்பமே – அப்பா

5. அனுதின உணவு நீர்தானைய -என்
அன்றாட வெளிச்சம் நீர்தானையா
அருட்கடல் நீர்தானையா – எனக்கு

6. ஒரு குறைவின்றி நடத்துகின்றீர்
ஊழியம் தந்து மகிழ்கின்றீர்
அருகதை இல்லையையா – ஐயா

7. ஜெபமே எனது ஜீவனாகணும்
ஜெயக்கொடி எனது இலக்காகணும்
ஊழியம் உணவாகணும்
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
56
பாடல் - 5

பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்

S-52 | T-105 | E Minor
பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே

பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தவரே

1. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
காசுக்காகவே கர்த்தன் இயேசுவை
கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல்கொதா மலைக்கு இயேசுவை – பாவி

2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
பரிகாசமும் பசிதாகமும்
படுகாயமும் அடைந்தாரே – பாவி

3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முட்களில் பின்னி சூடிட
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக்காணும் உள்ளம் தாங்குமோ – பாவி

4. உலகத்தின் ரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
தம்மை நம்பினால் உம்மைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடி வா – பாவி
30
பாடல் - 6

மனதுருகும் தெய்வமே இயேசய்யா

E Minor
மனதுருகும் தெய்வமே இயேசய்யா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை
அவை காலைதோறும் புதிதாயிருக்கும்

மெய்யாக எங்களது
பாடுகளை ஏற்றுக்கொண்டு
துக்கங்களை சுமந்து கொண்டீர் ஐயா

எங்களுக்கு சமாதானம்
உண்டு பண்ணும் தண்டனையோ
உம்மேலே விழுந்ததையா ஐயா

சாபமான முள்முடியே
தலைமேலே சுமந்து கொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தீர் ஐயா

எங்களது மீறுதலால்
காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
தழும்புகளால் சுகாமானோம் உந்தன்

தேடிவந்த மனிதர்களின்
தேவைகளை அறிந்தவராய்
தினம் தினம் அற்புதம் செய்தீர் ஐயா
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
49
பாடல் - 7

சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்

S-9 | T-116 | G Major
சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப் பாரிடுவேன் – ஆ ஆ
சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில் – சிலுவையில்

1. பாவப் பாரச்சுமையதால் சோர்ந்து
தளர்ந்தென் ஜீவியமே ஆ ஆ
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகில்
ஏகுவேன் பறந்தே வேகம் – சிலுவையில்

2. எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன்
ஏசுவை சார்ந்து நிற்பேன் – ஆ ஆ
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக் கொண்டால்
அலைமிக மோதிடும் அந்நாள்
ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார் – சிலுவையில்

3. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டே
இன்னல்கள் மறந்திடுவேன் – ஆ ஆ
திருமறை இன்னிசை நாதம்
தேனிலுமினிய வேதம்
தருமெனக்கனந்த சந்தோஷம்
தீர்க்குமென் இதயத்தின் தோஷம் – சிலுவையில்
344
பாடல் - 8

கல்வாரியின் கருணையிதே

S-142 | T-134 | D Major
கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
கர்த்தன் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே

விலையேறப் பெற்ற திருரத்தமே -அவர்
விலாவினின்று பாயுதே
விலையேறப் பெற்றோனாய்
உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே

பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
இவ்வன்புக் கிணையாகுமோ
அன்னையிலும் அன்பு வைத்தே
தம் ஜீவனை ஈந்தாரே

சிந்தையிலே பாரங்களும்
நிந்தைகள் ஏற்றவராய்
தொங்குகின்றார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே

எந்தனுக்காய் கல்வாரியில்
இந்தப் பாடுகள் பட்டீர்
தந்தையே உம் அன்பினையே
சிந்தித்தே சேவை செய்வேன்

மனுஷனை நீர் நினைக்கவும்
அவனை விசாரிக்கவும்
மண்ணில் அவன் எம்மாத்திரம்
மன்னவா உம் தயவே
78
பாடல் - 9

இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்

இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்
எந்தனுக்காக சீந்தினீரே -2
கோரப்பாடுகள் யாவும் சகித்தீர்
அத்தனையும் எனக்காகவோ

மா பாவியாம் என்னை நினைக்க
மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா
தேவ தூதரிலும் மகிபனாய்
என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன்

என் மேல் பாராட்டின உமதன்புக்
கீடாய் என்ன நான் செய்திடுவேன்
நரகாக்கினையில் நின்று மீட்ட
சுத்த கிருபையை நித்தம் பாடுவேன்

எந்தன் பாவங்கள் பாரச்சுமை போல
தாங்கக்கூடாத மா பாரம்
மன்னிக்கும் தயை பெருத்த என் தேவா
மன்னித்தும் மறந்தும் தள்ளனீர்

எந்தன் பாதங்கள் சறுக்கிடும்போது
வலக்கரத்தாலே தாங்குகின்றீர்
மனபாரத்தால் சோர்ந்திடும்போது
ஜீவ வார்த்தையால் தேற்றிகின்றீர்

எனக்காக நீர் யாவும் முடித்தீர்
உமக்காக நான் என்ன செய்வேன்
எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம் உம்
சிலுவை சுமந்து வருவேன்
42
பாடல் - 10

பரிபூரண ஆனந்தம்

S-141 | T-142 | E Major
பரிபூரண ஆனந்தம் நீங்க தானே
நிரந்தர பேரின்பம் நீங்க தானே – 2

இயேசு ராஜா என் நேசரே
எல்லாமே நீங்க தானே – 2

இம்மானுவேல் இயேசு ராஜா
எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2

தேவையான ஒன்று நீங்க தானே
எடுபடாத நல்லபங்கு நீங்க தானே – 2
அன்புகூர்ந்து பலியானீரே
இரத்தம் சிந்தி இரட்சித்தீரே – 2

கிருபையினால்
மீறுதல்கள் மன்னித்தீரே
இரக்கத்தினால்
வியாதிகள் நீக்கினீரே – 2
அன்பினாலும் மகிமையினாலும்
முடிசூட்டி மகிழ்கின்றீர் – 2 – உம்

குழியிலிருந்து மீட்டீரே
நன்றி ஐயா
உன்னதத்தில் அமரச் செய்தீர்
நன்றி ஐயா – 2
எனையாளும் தகப்பன் நீர்தான்
எனக்குரிய பங்கும் நீர்தான் – 2
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
41
பாடல் - 11

நன்றிபலிபீடம் கட்டுவோம்

T-123 | E Minor
நன்றிபலிபீடம் கட்டுவோம்
நல்லதெய்வம் நன்மை செய்தார்
செய்த நன்மைகள் ஆயிரங்கள்
சொல்லி சொல்லி பாடுவேன்

நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்
பாவம் நீங்கிட கழுவி விட்டீர்
உமக்கென்று வாழ பிரித்தெடுத்து
உமது ஊழியம் செய்ய வைத்தீர்

பார்க்கும் கண்களை தந்தீரய்யா
பாடும் உதடுகள் தந்தீரய்யா
உழைக்கும் கரங்களை தந்தீரய்யா
ஓடும் கால்களைத் தந்தீரய்யா

புதிய உடன்பாட்டின் அடையாளமாய்
புனித இரத்தம் ஊற்றினீரே
சத்திய ஜீவ வார்த்தையாலே
மரித்த வாழ்வையே மாற்றினீரே

இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்
இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர்
உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு
உரிமை சொத்தாக வைத்துக் கொண்டீர்
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
58
பாடல் - 12

சிலுவை சுமந்த உருவம்

S-142 | D Minor
சிலுவை சுமந்த உருவம்
சிந்தின இரத்தம் புரண்டோடியே
நதிபோலவே பாய்கின்றதே
நம்பி இயேசுவண்டை வா

1. பொல்லா உலக சிற்றின்பங்கள்
எல்லாம் அழியும் மாயை
காணாய் நிலையான சந்தோஷம் பூவில்
கர்த்தாவின் அன்பண்டைவா — சிலுவை

2. ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல்
ஆத்மம் நஷ்டமடைந்தால்
லோகம் முழுவதும் ஆதாயமாக்கியும்
லாபம் ஒன்றுமில்லையே — சிலுவை

3. பாவ மனித ஜாதிகளைப்
பாசமாய் மீட்க வந்தார்
பாவப் பரிகாரி கர்த்தர் இயேசுநாதர்
பாவமெல்லாம் சுமந்தார் — சிலுவை

4. நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ
நித்திய மோட்ச வாழ்வில்
தேடி வாரோயோ பரிசுத்த ஜீவியம்
தேவை அதை அடைவாய் — சிலுவை

5. தாகமடைந்தோர் எல்லோருமே
தாகத்தை தீர்க்க வாரும்
ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசுநாதர்
ஜீவன் உனக்களிப்பார் — சிலுவை

6. உந்தன் பெலத்தில் வாழ்ந்திடாதே நிம்மதி நீ இழப்பாய்
கர்த்தரே தஞ்சம் என்று நீ வந்துட்டால் நிம்மதி நீ பெறுவாய்
பாடல் எழுதியவர்:
Sarah Navaroji
46
பாடல் - 13

என்னை நேசிக்கின்றாயா

என்னை  நேசிக்கின்றாயா?
என்னை  நேசிக்கின்றாயா?
கல்வாரி காட்சியை கண்டபின்னும்
நேசியாமல் இருப்பாயா -(2)

பாவத்தின் அகோரத்தை பார்
பாதகத்தின் முடிவினை பார்-(2)
பரிகாச சின்னமாய் சிலுவையிலே
பலியான பாவி உனக்காய்-(2)

பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாசம் பொங்க அழைக்கிறேன் நான்-(2)
உன் பாவம் யாவும்  சுமப்பேன்
என்றேன் பாதம் தன்னில் இளைபாறவா-(2)

வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால்-(2)
தேடி இரட்சிக்க பிதா என்னை
அனுப்பிடவே ஓடிவந்தேன் மானிடனாய்-(2)
42
பாடல் - 14

ஜீவனுள்ள தேவனே வாரும்

ஜீவனுள்ள தேவனே வாரும்
ஜீவ பாதையிலே நடத்தும்
ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலே
ஜீவன் பெற என்னை நடத்தும்

இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர்
இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் வல்லவர்

1. பாவிகள் துரோகிகள் ஐயா
பாவ ஆதாம் மக்களே தூயா
பாதகர் எம் பாவம் போக்கவே
பாதகன் போல் தொங்கினீரல்லோ

2. ஐந்து கண்ட மக்களுக்காக
ஐந்து காயமேற்ற நேசரே
நொந்துருகி வந்த மக்கள் மேல்
நேச ஆவி வீசச் செய்குவீர்

3. வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே
வாக்கு மாறா உண்மை நாதனே
வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்
வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்

4. நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே
நேசர் வர காலமாகுதே
மாயலோகம் நம்பி மாண்டிடும்
மானிடரை மீட்க மாட்டீரோ
30
பாடல் - 15

அந்தோகல்வாரியில் அருமை இரட்சகரே

அந்தோகல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குறார் (2)

மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமைக் குருசை தெரிந்தெடுத்தாரே
மாய லோகத்தோடழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே (2)

அழகுமில்லை சௌந்தர்யமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே

முள்ளின் முடியும்
செவ்வங்கி அணிந்தும்
கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்
குருதி வடிந்தவர் தொங்குறார்
வருந்தி மடிவோரையும் மீட்டிடவே

அதிசயம் இது இயேசுவின் தியாகம்
அதிலும் இன்பம் அன்பரின் தியானம்
அதை எண்ணியே நிதம் வாழுவேன்
அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே

சிலுவைக்காட்சியைக்கண்டுமுன்னேறி
சேவை செய்வேன் ஜீவனும் வைத்தே என்னைச்சேர்த்திடவருவேனென்றார்
என்றும் உண்மையுடன்
நம்பி வாழ்ந்திடுவேன்
58
பாடல் - 16

என்மீது அன்புகூர்ந்து

என்மீது அன்புகூர்ந்து
பலியானீர் சிலுவையிலே
எனக்காய் இரத்தம் சிந்தி
கழுவினீர் குற்றம் நீங்க
பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால்
உமக்கென்று வாழ்ந்திட

ஆராதனை உமக்கே
அனுதினமும் உமக்கே

1. பிதாவான என் தேவனே
தகப்பனே என் தந்தையே
மாட்சிமையும் மகத்துவமும்
உமக்குத்தானே என்றென்றைக்கும்
வல்லமையும் மகிமையும்
தகப்பனே உமக்குத்தானே

2. உம் இரத்தத்தால் பிதாவோடு
ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர்
கறைபடாத மகன(ள)க
நிறுத்தி தினம் பார்க்கின்றீர்

3. மாம்சமான திரையை அன்று
கிழித்து புது வழி திறந்தீர் – உம்
மகா மகா பரிசுத்த உம்
திருச்சமுகம் நுழையச் செய்தீர்

4. உம் சமூகம் நிறுத்தினரே
உமது சித்தம் நான் செய்திட
அரசராக குருவாக
ஏற்படுத்தினீர் ஊழியம் செய்ய
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
28
பாடல் - 17

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே- கர்த்தா
உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

கெத்செமனே பூங்காவினில்
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கின்றதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே

சிலுவையில் வாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போது அவர்க்காய் வேண்டினீரோ
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் மனம் பெரிதே

எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ- எங்களை
தரை மட்டும் தாழ்த்துகிறோம்
தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும்
14
பாடல் - 18

இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே

S-6 | B Major
இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே
இயேசு கிறிஸ்துவின் இரத்தமே
(எனக்கு) விலையாக சிந்தப்பட்டதே – 2

பாவங்கள் யாவையும் கழுவி என்னை
பரிசுத்தமாகின வல்ல இரத்தமே
சுத்தமனச்சாட்சியை எனக்குத் தந்து
சுத்திகரித்த பரிசுத்த இரத்தமே

தூரமான புற ஜாதி எனக்கு
சொந்தமென்ற உறவை தந்த இரத்தமே
ஜீவனுள்ள புதிய மார்கத்தினுள்
பிரவேசிக்க தைரியம் தந்த இரத்தமே

நித்திய மீட்பை எனக்குத்தர
எதிர்க்கும் சாத்தான் மேல் ஜெயம் பெற
நன்மைகள் எனக்காய் பேசுகிற
தெளிக்கப்படும் பரிசுத்த இரத்தமே
பாடல் எழுதியவர்:
Joseph Aldrin
36
Made with ❤️ by Alpha Foster