அந்தோகல்வாரியில் அருமை இரட்சகரே

அந்தோகல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குறார் (2)

மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமைக் குருசை தெரிந்தெடுத்தாரே
மாய லோகத்தோடழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே (2)

அழகுமில்லை சௌந்தர்யமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே

முள்ளின் முடியும்
செவ்வங்கி அணிந்தும்
கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்
குருதி வடிந்தவர் தொங்குறார்
வருந்தி மடிவோரையும் மீட்டிடவே

அதிசயம் இது இயேசுவின் தியாகம்
அதிலும் இன்பம் அன்பரின் தியானம்
அதை எண்ணியே நிதம் வாழுவேன்
அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே

சிலுவைக்காட்சியைக்கண்டுமுன்னேறி
சேவை செய்வேன் ஜீவனும் வைத்தே என்னைச்சேர்த்திடவருவேனென்றார்
என்றும் உண்மையுடன்
நம்பி வாழ்ந்திடுவேன்
58
Tamil Christian Songs | CMM Choir
Made with ❤️ by Alpha Foster