முழு உள்ளத்தால் உம்மைத் துதிப்பேன்
தொனி உயர்த்தி உம் நன்மைகளை சொல்லுவேன்
வானம் ஒழிந்துபோனாலும் பூமி ஒழிந்துபோனாலும்
உம் வார்த்தை ஒருபோதும் ஒழியாதே
மகத்துவ தேவன் நீரே
சர்வ வல்லமையுள்ளவரும் நீரே
ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரே
வாழ்நாளெல்லாம் நீர் மாத்திரமே
ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரே
வாழ்நாளெல்லாம் நீர் போதுமே
இராஜாதி ராஜன் இயேசு
இம்மானுவேல் நம்முடனே
எல்ஷடாய் தேவன் நீரே
என்னைக் காப்பவர் நீரே
குறையின்றி என்னை நடத்திடுவீரே
ஜீவாதிபதியாம் இயேசு
ஜீவனின் பெலனும் அவரே
யாருக்கு அஞ்சிடுவேன் நான்?
யாருக்குப் பயப்படுவேன் நான்?
அவரே என் துணையானரே