ஆனந்த துதி ஒலி கேட்கும்

S-97 | T-109 | E Major
ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும் – ஆ… ஆ…

மகிமைப் படுத்துவேனென்றாரே
மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சி பெற்று உயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம் குன்றிடமாட்டோம்
கறையில்லா தேவனின் வாக்கு – ஆ (2)

யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாகத் தேவன் அருள்வார் – ஆ (2)

ஆறாத காயங்கள் ஆறும்
ஆரோக்கியம் வாழ்வினில் மூடும்
ஆற்றியே தேற்றும் நல்நாதர்
போற்றியே பாதம் பணிவோம்
அனாதி தேவனே அடைக்கலம் பாரினில்
அனாதையாவதே இல்லை – ஆ (2)

விடுதலை முழங்கிடுவோமே
விக்கினம் யாவும் அகலும்
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
இரட்சகன் மீட்பருள்வாரே
நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
விடுதலை பெருவிழா காண்போம் – ஆ (2)

ஆதிநிலை ஏகிடுவோமே
ஆசீர் திரும்பப் பெறுவோமே
பாழான மண்மேடுகள் யாவும்
பாராளும் வேந்தன் மனையாகும்
சிறைவாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும் – ஆ (2)
64
Tamil Christian Songs | CMM Choir
Made with ❤️ by Alpha Foster