ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே

S-53 | T-122 | G Major | Custom: G# Major
ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
அருமையாய் இயேசு நமக்களித்த
அளவில்லா கிருபை பெரிதல்லவோ 
அனுதின ஜீவியத்தில்

ஆத்துமமே என் முழு உள்ளமே
உன் அற்புத தேவனையே ஸ்தோத்தரி 
பொங்கிடுதே என் உள்ளத்திலே 
பேரன்பின் பெரு வெள்ளமே

கருணையாய் இதுவரை கைவிடாமலே
கண்மணிபோல் எம்மை காத்தாரே 
கவலைகள் நீக்கி கண்ணீர் துடைத்தார் 
கருத்துடன் பாடிடுவோம்

படகிலே படுத்து உறங்கினாலும்
கடும்புயல் அடித்து கவிழ்ந்தாலும்
கடலையும் காற்றையும் அமர்த்தி எம்மை 
காப்பாரே அல்லேலூயா

யோர்தானைக் கடப்போம் அவர் பெலத்தால் 
எரிகோவைத் தகர்ப்போம் அவர் துதியால் 
இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தே 
என்றென்றுமாய் வாழுவோம்

பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம்
அதி சீக்கிரத்தில் முடிகிறதே
விழிப்புடன் கூடி தரித்திருப்போம்
விரைந்தவர் வந்திடுவார்
70
Tamil Christian Songs | CMM Choir
Made with ❤️ by Alpha Foster