ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்

S-50 | T-112 | C Major
ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
ஆசையவரென் ஆத்துமாவிற்கே
ஆனந்தனந்தமாய் ஆசிகளருளும்
ஆண்டவர் இயேசு போல் யாருமில்லையே

இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் வேறெங்குமில்லையே

தந்தை தாயும் உன் சொந்தமானோர்களும்
தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
தாங்கிடுவேனென் நீதியின் கரத்தால்
தாபரமும் நல்ல நாதனுமென்றார்

கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
கிருபையும் வெளியாகினதே
நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால்
ஜீவன் அழியாமை வெளியாக்கினார்

ஒப்பில்லாத நம்பிக்கை சந்தோஷமும்
மகிழ்ச்சியின் கிரீடமாகவே
அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே
ஆதி விஸ்வாசத்தில் வளர்ந்திடுவோம்

அழுகையின் தாழ்வில் நடப்பவரை
ஆழிபோல் வான் மழை நிறைக்குமே
சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி
பெலத்தின் மேல் பெலன் அடைந்திடுவோம்
30
Tamil Christian Songs | CMM Choir
Made with ❤️ by Alpha Foster