திருமணம்
3 songs
பாடல் - 1

ஆசீர்வதியும் கர்த்தரே

1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே
நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
வீசீரோ வானஜோதி கதிரிங்கே
மேசியா எம் மணவாளனே
ஆசாரியரும் வான் ராஜனும்
ஆசீர்வதித்திடும்

2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரே
உம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால்
இம்மணமக்கள் மீதிறங்கிடவே
இவ்விரு பேரையுங் காக்கவே
விண் மக்களாக நடக்கவே
வேந்தா நடத்துமே – வீசீரோ

3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்
உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத்தோடென் பாக்கி சூட்சமே
உம்மிலே தங்கித்தரிக்க
ஊக்கம் அருளுமே – வீசீரோ

4. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே
வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம்
உற்றவான் ராயர் சேயர்க்கே
ஒப்பாய் ஒழுகவே – வீசீரோ

5. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
ஆதரித்தருளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
மாதிரளாக இவர் சந்ததியார்
வந்து துதித்தெம்மை என்றும் பிரஸ்தாபிக்க
ஆ தேவ கிருபை தீர்மானம்
ஆம் போல் அருளுமேன் – வீசீரோ

6. ஞான விவாகம் எப்பொழுதும் ஞாபமாகவே
வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை
ஆனந்தமாகவே தூய தன்மையதை
ஆடையாய் நீர் ஈயத்தரித்து
சேனையோடே நீர் வரையில்
சேர்ந்து நீர் சுகிக்கவே – வீசீரோ
29
பாடல் - 2

ஆத்துமமே என் முழு உள்ளமே

ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்
ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த – உன்
ஆண்டவரைத் தொழுதேத்து

1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள – ஆத்துமமே

2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத – ஆத்துமமே

3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும், மேலான – ஆத்துமமே

4. வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்த
ஓதரும் தயைசெய் துயிர் தந்த – ஆத்துமமே

5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடி சூட்டும் – ஆத்துமமே

6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
இதயமே, உள்ளமே, என் மனமே – ஆத்துமமே
23
பாடல் - 3

சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்

G Minor
சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்
உம்மை அன்றி யாரும் இல்ல
முடிந்ததில் துவக்கத்தை பார்க்கும்
உங்களுக்கு ஈடே இல்லை -2

நீர் சொல்லி அமராத புயல் ஒன்றை பார்த்தது இல்ல
நீர் சொல்லி கேளாத சூழ்நிலை எதுவும் இல்ல

ஆராதனை ஆராதனை
சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே
ஆராதனை ஆராதனை
வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே -2

நீர் பாய்ச்சி காப்பாற்றுவேன்
கை விட மாட்டேன் என்றீர் – 2
நான் வரண்டிடும் அறிகுறி தோன்றுமுன்
வாய்க்காலாய் வருபவரே -2 ஆராதனை

சொன்னதை செய்யும் அளவும்
கை விட மாட்டேன் என்றீர் -2
இந்த எத்தனை இஸ்ரவேலக்கி
தேசத்தின் தலை ஆக்கினீர் – 2 ஆராதனை

பூர்வத்தில் அடைப்பட்டதை
எனக்காக திறந்து வைத்தீர் -2
ஒரு மனிதனும் அடைக்கமுடியாத
ரெஹபோத்தை எனக்கு தந்தீர்
ஒரு மனிதனும் தடுக்கமுடியாத
ரெஹபோத்தை எனக்கு தந்தீர் – ஆராதனை
பாடல் எழுதியவர்:
John Jebaraj
Open Video
16
Made with ❤️ by Alpha Foster