கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
கை கொட்டிப் பாடிடுவோம் -இயேசு
ராஜன் உயிர்த்தெழுந்தார் -அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம்
பார் அதோ கல்லறை மூடின பெருங்கல்
புரண்டுருண்டோடுது பார் – அங்கு
போட்ட முத்திரைக் காவல் நிற்குமோ
தேவ புத்திரர் சந்நிதி முன்
வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுவோம் -தாம்
கூறின மாமறை விட்டனர் கல்லறை
போங்கள் கலிலேயாவுக்கு
அன்னா காய்பா ஆசாரியர் சங்கம்
அதிரடி கொள்ளுகின்றார் -இன்னா
பூதகணங்கள் இடி ஒலி கண்டு
பயந்து நடுங்குகின்றார்
வாசல் நிலைகளை உயிர்த்தி நடப்போம்
வருகின்றார் ஜெய வீரர் – நம்
மேளவாத்தியம் கைமணி பூரிகை
எடுத்து முழுங்கிடுவோம்
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு
வெற்றி உண்டு வெற்றி உண்டு
என்னென்ன துன்பம் வந்தாலும்
நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும்
நான் சோர்ந்து போகமாட்டேன்
என் ராஜா முன்னே செல்கிறார்
வெற்றி பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து
நான் ஓசன்னா பாடிடுவேன்
சாத்தானின் அதிகாரமெல்லாம்
என் நேசர் பறித்துக் கொண்டார்
சிலுவையில் அறைந்து விட்டார்
காலாலே மிதித்து விட்டார்-இயேசு
பாவங்கள் போக்கிவிட்டார்
சாபங்கள் நீக்கி விட்டார்
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன்
மேகங்கள் நடுவினிலே
என் நேசர் வரப்போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
ஜெயம் தரும் இயேசு என்னிலே
தோல்வி என்பது இல்லையே
ஜெயம் ஜெயம் (2) ஜெயமே
இயேசுவின் நாமத்தில் ஜெயமே
கல்வாரி சிலுவையில் தோல்வியில்லை
சாத்தானின் தலைகள் உடைந்தனவே
துரைத்தனம் அதிகாரம் யாவையுமே வென்று
சிலுவையில் இயேசு வெற்றி சிறந்தார்
மரணமே உந்தன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
பாதாளம் யாவையும் வென்ற இயேசுவால்
பாய்திடுவேன் ஒரு சேனைக்குள்ளயே
எனக்கெதிராய் வரும் ஆயுதங்கள்
இனி மேல் ஒன்றும் வாய்த்திடாதே
ஒரு வழியாய் சத்துரு எழும்பி வந்தால்
ஏழு வழியாய் ஓடி போவான்
அவர் எந்தன் சங்கீதமானவர்
பெலமுள்ள கோட்டையுமாம்
ஜீவனின் அதிபதியான அவரை
ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே
வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்
திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே
இரண்டு மூன்று பேர் எந்தன் நாமத்தினால்
இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்
இருப்பேன் என்றவர் நமது தேவன்
இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம்
வானவர் கிறிஸ்தேசு நாமமதை
வாழ்நாள் முழுவதும் வாழ்த்திடுவோம்
வருகையில் அவரோடு இணைந்து என்றும்
வணங்குவோம் வாழ்த்துவோம்
போற்றிடுவோம்
என்னைக் கண்டார் – இயேசு
என்னைக் கண்டார் – உள்ளங்கையில்
என்னை வரைந்து கொண்டார்
கண்ணுக்குள்ளே என்னை வைத்து
கடைசி வரைக்கும் காத்துக் கொள்வார்
இயேசு என் தேவன் இயேசு என் ஜீவன்
இயேசு தான் எனக்கு எல்லாம் எல்லாம்
கட்டவிழ்த்தார் என்னை கட்டவிழ்த்தார்
சத்துருவை அவர் துரத்தி விட்டார்
சாபத்தையும் வியாதியையும்
சாவினால் வென்று ஜெயம் கொடுத்தார்
மீட்டுக் கொண்டார் – என்னை
மீட்டுக் கொண்டார் – பாவத்திலிருந்தென்னை
மீட்டுக் கொண்டார்
சொந்த பிள்ளை என்றும் என்னை
உறுதிப்படுத்த தம் ஆவி தந்தார்
ஜெயம் தந்தார் இயேசு ஜெயம் தந்தார்
சத்துருவின் மேல் அவர் ஜெயம் தந்தார்
உலகத்தின் மேல் ஜெயமெடுக்க
விசுவாசத்தின் வலிமை தந்தார்
எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மாராஜனே வந்திடுவார்
அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
தேவ எக்காளம் வானில் முழங்க
தேவாதி தேவனை சந்திப்போமே – எக்காள
கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் – எக்காள
கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்
கண்ணீர் கவலை அங்கே இல்லை
கர்த்தர் தாமே வெளிச்சமாவார் – எக்காள
துதியுங்கள் நம் தேவனை
போற்றுங்கள் நம் இராஜனை
வாழ்த்துங்கள் நம் கர்த்தரை
போற்றுவோம் வாழ்த்துவோம்
இன்றும் என்றென்றுமாய்
ஆ ஹா ஹா அல்லேலூயா
ஓஹோ ஹோ ஓசன்னா
அதிசயம் செய்யும் தேவன் பெரியவர்
நாம் ஆராதிக்கும் இயேசு வல்லவர்
நமக்காய் யாவும் செய்து முடித்தார்
நன்றியோடு ஆராதிப்போம்
நம் பாவம் போக்கும் ஜீவ தேவன் நல்லவர்
நம் பாரம் நீக்கும் வல்ல தேவன் சிறந்தவர்
கண்ணீர் கவலை வியாதி யாவும் மாற்றுவார்
கரங்களைத் தட்டி ஆர்ப்பரிப்போம்
நமக்காய் இரத்தம் சிந்தி மரித்தார்
மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்
நேற்றும் இன்றும் மாறிடா நம் இயேசுவை
கரங்களை உயர்த்தி துதித்திடுவோம்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ
ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
சிறிதானதோ பெரிதானதோ
பெற்ற பணி செய்து முடித்தோர் — அழகாய்
2. காடு மேடு கடந்து சென்று
கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்
உயர்வினிலும் தாழ்வினிலும்
ஊக்கமாக ஜெபித்தவர்கள் — அழகாய்
3. தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போன்று நின்றவர்கள்
யாசித்தாலும் போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள் — அழகாய்
4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
சீர் போராட்டம் செய்து முடித்தோர் — அழகாய்
5. வெள்ளை அங்கியைத் தரித்துக்கொண்டு
வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து
ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு
ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று — அழகாய்
6. இனி இவர்கள் பசி அடையார்
இனி இவர்கள் தாகமடையார்
வெயிலாகிலும் அனலாகிலும்
வேதனையை அளிப்பதில்லை — அழகாய்
7. ஆட்டுக்குட்டிக்கு தான் இவர் கண்ணீரை
அற அகற்றித் துடைத்திடுவார்
அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே
அள்ளிப் பருக இயேசு தாமே — அழகாய்
ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்
தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்
நாளுக்கு நாள் அற்புதமாய் என்னை தாங்கிடும்
நாதன் இயேசு என்னோடிருப்பார்
சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து
மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே
கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியை
கண்டு நன்றியுடன் பாடிடுவேன்
வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன்
வாஞ்சையுடன் என்னைத் தேடிவந்தார்
எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்
இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன்
கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்
தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்
இயேசு அல்லா ஆசை இப்பூவில் வேறே இல்லை
என்றும் எனக்கவர் ஆதரவே
உம்மைப் பின்சென்று ஊழியம் செய்து
உம் பாதம் சேர்ந்திட வாஞ்சிக்கிறேன்
தாரும் தேவா ஏழைக்கு மாறாத உம்கிருபை
கண்பாரும் என்றும் நான் உம் அடிமை
தேற்றிடுதே உம் வாக்குகள் என்னை
ஆற்றிடுதே உந்தண் சமூகமே
பெலத்தின் மேல் பெலனடைந்து நான் சேருவேன்
பேரின்ப சீயோனில் வாழ்ந்திடுவேன்
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் -2
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும்
இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு
கறை திரை அற்ற பரிசுத்தரோடு
ஏழை நான் பொன் வீதியில் உலாவிடுவேன் -2
தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது
அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன்
முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன்
வாரினால் அடிப்பட்ட மூதுகைப் பார்த்து
ஒவ்வொரு காயங்களாய் முத்தம் செய்வேன்
என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா
ஆஹா! எக்காளம் என்று முழங்கிடுமோ
ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ
அப்பா! என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ
ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமே
இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில்
இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை
பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில்
நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே
மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்
சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே
சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன்
லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால்
பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால்
நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே
என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால்
தினந்தோறும் உம்மில் உள்ள அன்பு என்னில் பொங்குதே
நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே