சுதந்திரம்
3 songs
பாடல் - 1

எங்கள் போராயுதங்கள்

எங்கள் போராயுதங்கள்
ஆவியின் வல்லமையே
அரண்களை நிர்மூலமாக்கும்
தேவன் தரும் பெலனே

கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால்
வெற்றி நிச்சயமே
எங்கும் எழுப்புதல்
இந்தியா கிறிஸ்டியா

தேவனுக்கெதிரான
எல்லா மனித எண்ணங்களை
கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள்
கீழ்படுத்தி ஜெயம் எடுப்போம்

கிறிஸ்துவின் திருவசனம்
ஆவியின் பட்டயமே
அனுதினம் அறிக்கை செய்து
அலகையை துரத்திடுவோம்

நற்செய்தி முழங்குவதே
நமது மிதியடிகள்
ஆத்தும பாரத்தினால்
அறிவிப்போம் சுவிசேஷம்

சத்தியம் இடைக்கச்சை
நீதி மார்க்கவசம்
இரட்சிப்பின் நிச்சயமே
நிரந்தர தலைக்கவசம்

விசுவாச வார்த்தைகள்தான்
காக்கும் நம் கேடகம்
தீயவன் தீக்கணைகள்
அவிழ்த்து ஜெயம் எடுப்போம்
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
32
பாடல் - 2

சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே

S-50 | T-118 | F Minor
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
பரலோக சந்தோஷமே
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
அவர் சமூகத்தில் சந்தோஷமே
இயேசுவின் சமூகத்தில் சந்தோஷமே

கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும்போது
கலங்கிடத் தேவையில்லை
கைகளை உயர்த்தி ஆராதித்தால்
பெரும் வெற்றியைத் தந்திடுவார்

போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும்
சோர்ந்திடவே வேண்டாம்
உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில்
ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே
37
பாடல் - 3

விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்

F Major
விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்
எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம்

நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம்
ஆடி ஆடித்துதிப்பேன் – எங்கும்
ஓடி ஓடி சொல்லுவேன்
என் இயேசு ஜீவிக்கிறார்

அவர் தேடி ஓடி வந்தார்
என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்
என் பாவம் அனைத்தும் மன்னித்தார்
புது மனிதனாக மாற்றினார்

அவர் அன்பின் அபிஷேகத்தால்
என்னை நிரப்பி நடத்துகின்றார்
சாத்தானின் வல்லமை வெல்ல
அதிகாரம் எனக்குத் தந்தார்

செங்கடலைக் கடந்து செல்வேன்
யோர்தானை மிதித்து நடப்பேன்
எரிகோவை சுற்றி வருவேன்
எக்காளம் ஊதி ஜெயிப்பேன்
பாடல் எழுதியவர்:
Fr. S. J. Berchmans
45
Made with ❤️ by Alpha Foster